அவுஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை தேடும் இலங்கை அரசு

04.10.2021 10:56:07

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை நாட்டின் புதிய தூதுவரை இலங்கை அரசு தேடி வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவிருந்த ஜகத் வெள்ளவத்த தற்போது அந்த பதவிக்கு நியமிக்கபடமாட்டார் என தெரியவந்துள்ளது.

இதற்கான உரிய காரணங்கள் தற்போது வரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.