ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

05.10.2021 15:28:30

தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல இன்று தமது 79 ஆவது வயதில் காலமானார்.

குருவிட்ட – எக்னெலிகொட பகுதியில் தமது வீட்டில் வைத்து அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சரீரம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.