இஸ்ரேல் மீதான தாக்குதல் நியாயமானது
டந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஐ.நா.வை கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani), ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு எழுதிய கடிதத்தில்,
இந்த வெட்கக்கேடான செயல் பயங்கரவாதத்தில் இஸ்ரேலின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டியதுடன், 2024 ஒக்டோபர் 1 அன்று இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை சட்டப்பூர்வமாக்கியது என்று வாதிட்டார்.
மேலும்,சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி உலக அமைதிக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது, இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக் கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அத்துடன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸால் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த படுகொலை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கொந்தளிப்பான உறவில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது என்றார்.
ஹமாஸின் முக்கிய பிரமுகரும் அதன் தலைவருமான ஹனியே, தெஹ்ரானுக்கு விஜயம் செய்து கொண்டிருந்தபோது கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.
62 வயதான ஹனியே, ஹமாஸின் ஒட்டுமொத்தத் தலைவராக பரவலாகக் கருதப்பட்டார், காசா பகுதியில் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நிலையில் ஐ.நா.வுக்கு ஈரான் எழுதிய கடிதம், இஸ்ரேல் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டியதுடன், இஸ்ரேலை பொறுப்புக்கூற வைக்கும் பாதுகாப்பு சபையின் பொறுப்பை எச்சரித்தது.
அதேநேரம், ஐ.நா. உறுப்பு நாட்டின் இறையாண்மை பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டதை பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் ஈரான் கண்டித்துள்ளது.
ஹனியேவின் படுகொலையைத் தொடர்ந்து, செப்டம்பர் 27 அன்று பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் மற்றும் ஒக்டோபர் 7 அன்று காசாவில் ஹனியேவின் வாரிசான யாஹ்யா சின்வார் உட்பட பல உயர்மட்ட கொலைகளை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.