பாராளுமன்றத்தில் குழப்பம்.

03.11.2026 08:54:45

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பினர்.

 

எப்படியிருப்பினும் அந்தச் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சூடான வாதவிவாதங்களை அடுத்து கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன.

இதன்போதுஇ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புப் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்