எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல் !
23.06.2021 13:03:07
இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர், எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் இக் காலப்பகுதியில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எனவே, இங்கிலாந்து அணியின் சார்பாக கலந்துக் கொள்ளும் ஜோஸ் பட்லர் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்பட்ட கொவிட் தீவிர அலை காரணமாக கடந்த மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.