ரிஷாட் மனைவி உள்ளிட்டோரிடம் 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

24.07.2021 10:16:57

 கைதுசெய்யப்பட்ட ரிஷாட்பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் தரகர் உட்பட நால்வரையும் 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன்  விசாரணைகளின் பின்னர் அவர்களை எதிர்வரும் ஜூலை 26 அன்று நீதிமன்றில் முன் ஆஜர்படுத்தவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு மற்றும் அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.