காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

01.10.2021 06:43:54

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து நேற்று  மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 28.09.21 காலை 6  மணிக்கு வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக சென்றவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நவாலி பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.