ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி!
19.08.2021 16:15:44
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அழைப்பு 20 க்கு 20 தொடரின் 7 ஆவது போட்டியில், ஸ்ரீலங்கா கிரிக்கட் சிவப்பு அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீல அணியும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணியும் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீல அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணி, 19 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.