உயர் நீதிமன்றத்தில் விசாரணை

17.01.2023 15:00:00

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருது தெரிவித்த அவர், ''அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாங்கள் விவாதிக்கிறோம் என்று கூறிய அவர், அமைச்சரவையினால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக எவரேனும் குறிப்பிட்டிருந்தால் அது தவறு.

உயர் நீதிமன்றத்தில் விசாரணை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் அல்லது தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

பொதுநிர்வாகம் அமைச்சர் என்ற வகையில், செயலாளருக்கு தான் உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பிரதமர் தெரிவித்தார். எவ்வாறாயினும், உள்ளுராட்சித் தேர்தலுக்கான பத்திரங்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் சர்ச்சைக்குரிய கடிதத்தை வெளியிட்டதற்காக உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன கடந்த வெள்ளிக்கிழமை (13), தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த கடிதம் தொடர்பில் விசாரிப்பதற்காக பொது நிர்வாக செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோதே அவர் மன்னிப்பு கோரியிருந்தார்.

அமைச்சரவை தீர்மானம்

கடந்த 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் மற்றும் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கடிதத்தை வழங்கியதாகவும், அது பொருத்தமற்றது என உணர்ந்ததையடுத்து, கடிதத்தை அனுப்பிய ஒரு மணித்தியாலத்திற்குள் அதனை மீளப்பெற தீர்மானித்ததாகவும் பொது நிர்வாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், அமைச்சரவை தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெற முடிவு தீர்மானித்ததால் கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், மறுநாள் 131 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.'' என குறிப்பிட்டார்.