தமிழருக்கு பாதுகாப்பு இல்லை!

10.08.2025 10:42:31

இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும்,முல்லைத்தீவில் - வடக்கு கிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

    

 

எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் முகாமிற்கு சென்ற பிறகுதான் அவரை கொலை செய்துதான் அவரை கொலை செய்து குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்க கூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்குகிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில்,ஒன்றிற்கு இரண்டு என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் காணப்படுகின்றனர்.

ஒரு இராணுவசிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அதுதான் அங்கு காணப்படுகின்ற யதார்த்தம், ஆகவே இந்த நிலையிலே,ஒரு இனப்படுகொலையையே செய்திருக்கின்ற ஒரு இராணுவம் 16 வருடங்களாக அந்த இனப்படுகொலை தொடர்பாக எந்த வித பொறுப்புக்கூறலும் நடக்காமலிருக்க,அந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களே பக்கத்துபக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியியுள்ளனர்.

பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தி பக்கத்தில வீதியில் நடந்து செல்கின்றார்கள்.பிள்ளைகளை கடத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கின்றார்கள். அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என தெரிவித்துவிட்டு முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள்.

ஆகவே இதெல்லாம் வந்து பெரிய படத்தில,அவர்கள் செய்த நேரடிகுற்றங்களிற்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது ஒன்று.

ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்;துகொண்டுள்ள நிலையிலே தொடர்ந்தும் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் அந்த மக்கள் மத்தியில் இருப்பது என்பது ,அந்த மக்களை இன்னும் இன்னும் மிக மோசமான ஒரு மனோஉளைச்சலிற்கு ,அவர்களின் மனதை உடைக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூறவைக்கின்ற வரைக்கும்,இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்குகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக இல்லை.அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து.

இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும்,முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை.