அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கின்றது இலங்கை அணி !
19.05.2021 12:07:33
இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலிய அணியின் 2021 – 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலிய அணி விளையாடவுள்ளது.
இந்த தொடரின் முதலாவது போட்டி அடுத்த வருடம் ஃபெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.