பாடகி பி.சுசீலா திடிரென மருத்துவமனையில் அனுமதி!
18.08.2024 12:02:30
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருப்பவர் பி.சுசீலா. அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது பாடல்களை தற்போதும் ரசித்து கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். |
தற்போது 88 வயதாகும் சுசீலா தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு அவர் சிகிச்சை தற்போது பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. |