ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ள பாகிஸ்தான் விவசாயிகள்!

10.11.2026 13:09:34

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்காக, பாகிஸ்தான் விவசாயிகள் ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தான் விவசாயிகள் சிலர், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இரண்டு ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹஃபீஸ் கோசோ (43) என்பவரும், அவருடன் இணைந்து 38 விவசாயிகளும் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

 

ஜேர்மன் எரிசக்தி ஜாம்பவானான RWE மற்றும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான Heidelberg Materials ஆகிய நிறுவனங்கள் மீதுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதாவது, 2022ஆம் ஆண்டு, சிந்து மாகாணம் ஒரு பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அந்த பெருவெள்ளத்தில், தங்கள் பயிர்கள், கால்நடைகள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் தாங்கள் இழந்துவிட்டதாக தெரிவிக்கும் விவசாயிகள், இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தும் மாசு காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக பயங்கர மழை வந்ததாலேயே தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக வாதம் முன்வைத்துள்ளார்கள்.

இது உலகளாவிய பிரச்சினை, ஆகவே, அது உலக அளவில்தான் தீர்க்கப்படவேண்டும் என்கிறார்கள் அவர்கள். இந்த வழக்குக்கு பாகிஸ்தான் மட்டுமின்றி பல ஐரோப்பிய நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன

ஏனென்றால், இந்த வழக்கு வெற்றி பெறுமானால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இதுபோன்ற பெரு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோர முயன்றுவரும் பல அமைப்புகளுக்கு அது ஒரு பெரும் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.