ஓமந்தை மாளிகை பகுதியில் யானையின் சடலம்
16.09.2021 12:02:01
வவுனியா ஓமந்தை மாளிகை பகுதியில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக காவற்துறையினருக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைளை முன்னெடுத்து வருகின்றனர்