விஜய் பிரதமராகும் வாய்ப்பிருக்கு!.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.. தவெக தலைவர் விஜய் முதல்வராக மாறியிருக்கிறார். விஜய் முதல்வரானதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரின் எதிரிகளும், அவரை பிடிக்காதவர்களும் அவர் மீது தொடர்ந்து வன்மங்களை தொடர்ந்து கக்கி வருகிறார்கள். பல பொய்யான தகவல்களையும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். ஆனால், விஜய் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஒருபக்கம் ரிக்கி ராதன் பண்டிட் என்கிற பிரபல ஜோதிடரை தமிழக அரசு முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது..
நம்பிக்கை தீர்மானத்தின் போது கடந்த விவாதத்திலும் தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ராதன் பண்டிட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசுப்பதிவியை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது..
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டிகொடுத்த ரிக்கி ராதன் பண்டிட் ‘விஜய்க்கு ஜோசியத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை.. எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு ஒரு அப்பா, மகன் போல.. ஒரு நண்பர் போல ஒரு பிணைப்புதான்.. இது தெரியாமல் என்னை அவரோடு இணைத்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது.. விஜயின் ஜாதகம் பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது.. இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார்’ என அவர் கூறினார்.
மேலும் மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது.. வரும் 2029-ல் மோடிக்கு ராகுதசை ராகு புத்தி.. அவர் பிரதமராவது கடினம்.. மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும்.. விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார்’ என அவர் சொல்லியிருக்கிறார்..