ஈரானின் ஒரே அணுமின் நிலையத்தில் தாக்குதல.

26.03.2026 08:13:49

ததையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பு கூறியது. அத்துடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த நிலையத்தைத் தாக்கியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில், இத்தாக்குதலால் தாங்கள் மிகுந்த சீற்றமடைந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பேரழிவை நோக்கிய ஒரு போக்கின் இந்த பொறுப்பற்ற, அசடுதியற்ற வெளிப்பட்டால் நாங்கள் மிகுந்த சீற்றம் அடைந்துள்ளோம்" என தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான Rosatom, இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஆலையில் இருந்து தனது ஊழியர்கள் குழுவை வெளியேற்றியதாக தெரிவித்தது.

உபகரணங்களை மேற்பார்வையிட ஒரு சில டசின் பேர் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று Rosatom தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸி லிகாச்சேவ் கூறியதாக RIA செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

புஷேர் அணுமின் நிலையம், ரோசாடமின் உதவியுடன் கட்டப்பட்டு, 2011யில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இதுவே நாட்டின் செயல்பாட்டில் உள்ள ஒரே அணுமின் நிலையமாக உள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, "அணுசக்தி பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்க்க, அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.