முக்கிய பதவிக்கு குறி வைக்கும் சுதந்திர கட்சி!

01.08.2022 10:43:31

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரபால சிறிசேனவுக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேலதிகமாக பல அமைச்சரவை பதவிகளை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், தமது கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவே நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு அமர்த்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

ரணில் மைத்திரி இடையே பேச்சு

இதேவேளை கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிலையில், சுதந்திர கட்சி, அரசாங்கத்திடம் கோரிய பதவிகளை, வழங்குவது குறித்து இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், தற்போதைய சபாநாயகரை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் பொதுஜன பெரமுன தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.