கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தில் திருத்தங்கள் வேண்டும் – சுதந்திர கட்சி

04.08.2021 04:48:21

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்று அந்த கட்சியால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் திருத்தப்பட வேண்டிய 4 விடயங்கள், இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.