சந்திரா'க்கு பண்ணிட்டேன் 'முகி'க்கு இனிதான் பண்ணனும்.. கீரவாணி வைத்த டுவிஸ்ட்

08.08.2023 10:28:45

'சந்திரமுகி -2' திரைபடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.  லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.