ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து!

24.11.2025 14:43:02

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவின் 57வது பிறந்த தினம் இன்றாகும்.

புதிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதன்போது நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

2005ஆம் அண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை
ஒன்பது வருடங்களில் நாங்கள் வீதிகளை புனரமைத்துள்ளோம்.

 

ஒரு நாளில் மாத்திரம் 12.8 கி.மீற்றர் வீதிகளை புனரமைத்தோம்.

250 கிரோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தோம்.

யுனு தர வீதிகள் 7500 கீலோ மீற்றர் அமைத்துள்ளோம்.

35 ஆயிரம் கி.மீற்றர் கிராமிய வீதிகள் அமைத்துள்ளோம்.

அன்று நாம் வீதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, தற்போதைய அரசாங்கத்தினர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

தற்போது ஆட்சிக்கு வந்து ஒருவரும் கடந்துள்ளது தற்போது கண்டி அதிவேக வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

13 கிலோமீற்றர் வீதியை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.

பொத்துஹர – ரம்புக்கனை அதனையடுத்து மீரிகம – கடவத்த வீதியை அமைப்பதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக கூறியிருக்கின்றீர்கள்.

நாம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுத்துச் செல்வது எமக்கு மகிழ்;ச்சியே.
மத்தள விமான நிலையம் சிறிது காலம் மூடப்பட்டது.

 

அதன்பின்னர் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டது.

அதற்கு தற்போதைய ஆட்சியாளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

நீங்கள் கூறுவது போது 76 வருடசாபக்கேடனான காலப்பகுதியில்
வீதிகள் அமைக்கப்பட்டன.

விமான நிலையங்கள் துறைமுகங்கள நகரவீடமைப்பு திட்டங்கள் கிராமிய வீடமைப்பு தி;ட்டங்கள் அமைக்கப்பட்டன.

இந்த ஒரு வருட காலப்பகுதியில் கடந்த வருடத்தில் முன்மொழியப்பட்ட திட்டமிட்டங்கள் பூர்த்திசெய்யப்படவில்லை.