ஓஹோனு வாழ்ந்து ஓய்ஞ்சு போன தயாரிப்பாளர்கள்!

22.12.2025 14:44:04

திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி அதன் மூலம் ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இப்போது அவர் மீதும் அவருடைய சகோதரர் மீதும் வழக்கு பதிவு போட்டு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இருக்கிறது நீதிமன்றம். சொந்த ஊரிலிருந்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து பல படங்களை எடுத்து வெற்றி கண்ட ஒரு இயக்குனருக்கு வெளியில் இருந்து நீ படம் எடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையை தூண்டி விடுகிறார்கள் பைனான்ஸியர்கள். அதன் மூலம் சரி படம் எடுத்தால் லாபம் தானே என தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து அதில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஓஹோன்னு வாழ்க்கை.

 இல்லை என்றால் தெருக்கோடி தான். அப்படித்தான் லிங்குசாமி ஆரம்பத்தில் பல நல்ல படங்களை கொடுத்து வந்தார். திடீரென அவருக்கு ஒரு சரிவு ஏற்பட்டது. கமலை வைத்து உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை எடுத்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுதான் லிங்குசாமி வீழ்ந்த இடம். அதிலிருந்து இன்று வரை அவரால் மீண்டு  வரவே முடியவில்லை. அதன் பிறகு ஒரு கம்பெனியில் 35 லட்சம் கடன் வாங்கி அது இப்போது 48 லட்சமாக மாறி இருக்கிறது. அவர்கள் தான் லிங்குசாமிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

 அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு இன்னும் ஆறு மாத காலத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் இன்னும் ஆறு மாத காலம் சிறை தண்டனை நீடிக்கும் என உத்தரவிட்டார். ஆனால் எங்களால் பணம் இப்போது கொடுக்க முடியாது என லிங்குசாமியும் அவருடைய சகோதரரும் இந்த வழக்கை அப்பில் செய்திருக்கின்றனர். லிங்குசாமி மட்டும் அல்ல சினிமா உலகில் இவரை போல எத்தனையோ தயாரிப்பாளர்கள் ஓஹோன்னு வாழ்ந்து பிறகு படம் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் மாட்டி இருக்கின்றனர்.

 தேவர் பிலிம்ஸ் நிறுவனம் எம்ஜிஆர் சிவாஜி வைத்து எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் தயாரிப்பு தொழிலையே நிறுத்திக் கொண்டார்கள். ஏவிஎம் நிறுவனமும் அப்படித்தான். தமிழ் சினிமாவில் ஒரு பாரம்பரியமிக்க நிறுவனமாக திகழ்ந்தது தான் ஏவிஎம் நிறுவனம். ஆனால் ஏவிஎம் சரவணன் இப்பொழுது இருக்கிற தமிழ் சினிமாவின் போக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் கையில் இருந்த சினிமா இப்போது ஒரு சில நடிகர்களின் கைக்கு மாறியிருக்கிறது என்று கூறி தயாரிப்பு தொழிலில் இருந்து பின் வாங்கினார்.

 அதேபோல பழம்பெறும் நடிகர் பாஸ்கர் சிவாஜியை வைத்து எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் படங்களை தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். ஏன் இப்போது கமல் கூட நஷ்டத்தில் இருந்ததனால் தான் ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுக்க நினைக்கிறார். அதன் மூலம் தான் கடனில் இருந்து மீண்டு விடலாம் என நினைத்து தான் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார் கமல்.