
இணையத்தைக் கலக்கிவரும் திரிஷாவின் ‘சுகர் பேபி‘!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 5-ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப் படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமேக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தக் லைஃப்’ திரைப்படத்தின் சுகர் பேபி பாடலை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த பாடலானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் மூன்று மொழிகளிலுமே வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.