கூலி முன்பதிவிலேயே மிகப்பெரிய சாதனை!

29.07.2025 07:05:00

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்காக ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில் தற்போது முன்பதிவிலேயே பிரம்மாண்ட சாதனையை படம் படைத்து இருக்கிறது.

அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளுக்கான வசூல் $500K+ வந்திருக்கிறதாம். ரிலீசுக்கு இன்னும் 17 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே அரை மில்லியன் டாலர் வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.