சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்.
|
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி சட்டசபையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். அதில் தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் வசமுள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடக்கவுள்ளது. |
|
அதற்கு முன்பாக கேள்வி நேரம் முடிவடைந்த பின், முதல்வர் விஜய் தனித் தீர்னாமன் ஒன்றை கொண்டு வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி சட்டசபையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானத்தை விஜய் முன்மொழிய உள்ளார். முதல்வர் விஜய் கொண்டு வரும் இந்த தீர்மானத்தின் போது உறுப்பினர்கள் பேச உள்ளனர். அதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே 6.12.2006ல் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதன்பின் மீண்டும் இந்த தீர்மானத்தை விஜய் கொண்டு வருகிறார். நீண்ட காலமாகவே உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இம்முறை தவெக இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ள சூழலில், மத்திய அரசிடம் எந்த வகையில் அழுத்தம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. |