11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 6 இளைஞர்கள் கைது

18.01.2022 05:37:57

11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர்கள் இந்த சிறுமியை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை மது அருந்தவும் பழக்கப்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.