சோமாலியா குண்டு வெடிப்பு; 8 பேர் பலி

13.01.2022 06:35:25

கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில், நேற்று திடீரென குண்டு வெடித்தது.இதில் எட்டு பேர் பலியாயினர்; பலத்த காயமடைந்த ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமான நிலையத்தின் வெளியே நின்றிருந்த ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.