சாதனை படைத்த காந்தாரா.

27.09.2025 08:12:00

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படமான காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில் காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் சுமார் 55 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அதன்படி, இப் படத்தின் ட்ரெய்லர் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது, 24 மணித்தியாலத்தில் இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட ட்ரெய்லர் எனும் சாதனையை காந்தாரா செப்டர் 1 திரைப்படம் தன்வசப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்பில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதேவேளை, இப் படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.