ஈரான்- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
|
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. |
|
அந்த உரையாடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இடம்பெற்ற ஐரிஸ் டேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பாக இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலை “முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்” எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் ஜெனீவா உடன்படிக்கைகள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை மீட்பதிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்புவதிலும் இலங்கை எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து கவலை வெளியிட்ட அவர், இந்த சம்பவம் ஈரானிய மக்களின் நினைவில் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். |