விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான செய்தி

01.01.2021 09:11:47

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஇதை தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் திறக்கப்படவுள்ள குறிப்பான தினம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.