சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 வரை குறைவு!

01.08.2026 09:39:52

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று காலையில் ரூ.200 வரை அதிரடியாக குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரான் போர் காரணமாக நம் நாட்டில் வணிக சிலிண்டர் விலை கிடுகிடுவென அதிகரித்தது. தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில் வணிக சிலிண்டர் விலை குறைய தொடங்கி உள்ளது. Also Read விஜய்யை திருப்தி படுத்த இரவோடு இரவாக காவிரி நீர் திறப்பு! டிகே சிவக்குமார் மீது கர்நாடக பாஜக அட்டாக் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இதனால் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உள்பட பிற வணிக நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியாகி உள்ளன. அதன்படி இன்று காலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.200 வரை குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ரூ.202ம், கொல்கத்தாவில் ரூ.209ம் விலை குறைந்துள்ளது. இதன்மூலம் கொல்கத்தாவில் வணிக கேஸ் சிலிண்டர் ரூ.2,872.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது. தற்போது 2வது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சரிந்துள்ளது. ருப்பினும் கூட இன்று வீட்டு உபயோகத்துக்கன 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈரான் மீதான போர் காரணமாக நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கேஸ், கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. அரபு நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்டவை கப்பல்களில் வரும். ஆனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

இதனால் கேஸ், கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் கேஸ் சிலிண்டர் விலைகள் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டன. குறிப்பாக வணிகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலை மளமளவென உயர்ந்தது. அதுமட்டுமின்றி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க புக்கிங் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதால் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைய தொடங்கி உள்ளது. இது வணிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.