விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள அனுமதி

03.04.2024 07:43:03

தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு மாதாந்தம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு நான்கு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நான்கு விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.