3 வினாத்தாள்கள் கசிந்தன!

07.01.2025 08:11:47

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியே கசிந்துள்ளன. விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வௌியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.

“ நேற்றைய சிங்கள இலக்கியம் பரீட்சை வினாத்தாள் வெளியானதாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலாவது செய்தி கிடைத்தது. அதன்படி நேற்றுக் காலை அந்த பரீட்சை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். நேற்று பிற்பகலில், இன்று மற்றும் நாளை திட்டமிடப்பட்ட விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வௌியானதாக தகவல் கிடைத்தது."

இந்த வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.