இன்று நியூசிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 5ஆம் நாள் ஆட்டம்

06.06.2021 10:11:49

 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காகதுடுப்பாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இன்று 5 ஆம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 165 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.