வரியை குறைத்த விஜய்.

24.10.2026 10:41:43

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் பல அறிவிப்புகளையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும், புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டும் என அவர் விரும்புகிறார்.
 

அவற்றில் சில கடுமையான எதிர்ப்பையும், விமர்சனங்களையும் பெற்றால் அந்த அரசாணை வாபஸ் பெறப்படுகிறது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்தான் தமிழகத்தில் விமான எரிபொருள் (ATF) மீதான VAT வரியை குறைப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதற்கு பிரபல இண்டிகோ நிறுவனம் விஜய்க்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கை விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.