மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
27.01.2021 15:00:52
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கூற்றை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் குடியரசு நாளன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் போர்க்களமாக மாறியது.
பொலிஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்து பேரணியாகச் செல்ல விவசாயிகள் முயற்சி செய்ததால், தடியடி-கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு என்ற அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்த வன்முறையில் பொலிஸார் 300 பேர் காயமடைந்துள்ளதாக டெல்லி பொலிஸார் தகவல் தெரிவித்துள்ள அதேவேளை டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.