பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஹென்ரி ரூபெல்வ்- மெடிஸன் கீஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

27.05.2022 10:37:48

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் மெடிஸன் கீஸ் ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், அர்ஜெண்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிசை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ், 6-3, 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் மெடிஸன் கீஸ், பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மெடிஸன் கீஸ், 6-4, 7(7)-6(3) என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.