வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய அரசாங்கம் மற்றும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான செனட்டர் முஹம்மது இஷாக் தார் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம், மக்களுக்கு தனது வாழ்த்துக்களை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.