அரசியல் வருகை குறித்து விஜய் ஆண்டனியின் அதிரடி பதில்!

27.06.2025 00:21:55

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன்பின், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேலாயுதம், வேட்டைக்காரன்' என தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்து வந்தார். தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, அதில் பல படங்களில் ஆல்பம் ஹிட் கொடுத்தார்.

இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின், சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி அரசியல் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது.

50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.