நன்றி மறந்த தனுஷ்!.

23.08.2026 11:40:57

நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என சொல்லப்பட்டது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 

இந்த படத்திற்கு முதலில் லாபத்தில் பங்கு என்கிற சதவீத அடிப்படையில்தான் தனுசுக்கு சம்பளம் பேசப்பட்டது. அதை தனுஷம் ஏற்றுக் கொண்டார். ஆனால் திடீரென தற்போது தனுஷ் தனக்கு 60 முதல் 65 கோடி வரை சம்பளம் கொடுக்கவேண்டும் என கேட்பதாக சொல்லப்படுகிறது. இதை டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த படத்தை அப்படியே வேறொரு தயாரிப்பாளரின் கைக்கு மாற்றும் முயற்சியில் தனுஷ் இறங்கியிருக்கிறாராம்.

இந்த படம் தொடர்பாக தனுஷுக்கு 20 கோடி சம்பளம் மற்றும் படத்திற்கு செய்த செலவுகள் 10 கோடி என மொத்தம் 30 கோடியை டான்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் செலவு செய்துவிட்டது. எனவே இந்த படம் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் சென்றால் அந்த 30 கோடியை தரவேண்டும். அதோடு டான் பிக்சர்ஸ் நிறுவனம் என்.ஓ.சி தர வேண்டும். ஆனால் அந்த நிறுவனம் என்.ஒ.சியை தருவதற்கு தயாராக இல்லை என சொல்லப்படுகிறது..

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இட்லி கடை படத்தில்தான் முதன் முதலாக தனுசுக்கு 50 கோடிக்கு மேல சம்பளம் கொடுக்கப்பட்டது. அதோடு சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு தனுஷ் நடித்து கொடுக்காமல் இருந்தார். அது தொடர்பான பஞ்சாயத்துக்களையும் டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தீர்த்து வைத்தது.
 

 

ஏனெனில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் திமுக தலைமைக்கு நெருக்கமானவர். இன்னும் சொல்லப்போனால் திமுக தலைமையின் உறவினர். பராசக்தி படத்தைக் கூட இவர்தான் தயாரித்திருந்தார். கடந்த ஆட்சியின் போது அந்த நிறுவனத்தை பயன்படுத்தி தனது பிரச்சினையை தீர்த்துக் கொண்ட தனுஷ் தற்போது அந்த நிறுவனத்திற்கே ஆப்படித்திருப்பது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.