மஹிந்த சமரசிங்கவுக்கு தூதுவர் பதவி
18.09.2021 10:30:47
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக பதவிவகித்த ரவிநாத் ஆரியசிங்க, கடந்த தினம் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.