சிவா நடிக்கும் டான் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு !

20.07.2021 21:48:50

நடிகர் சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு  வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாரத்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகின்றார்.