காங்கோ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்.

28.07.2025 16:51:41

கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ADF கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரார்த்தனை கூட்டத்தின்போது அதிகாலை ஒரு மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், கத்தியாலும் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 38 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பலர் காயமடைந்துள்ளதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்லதாகவும் கூறப்படுகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ADF கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்புகளுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு தேவாலயத்திற்கு அருகிலிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு காங்கோ, ADF மற்றும் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு ஆயுத குழுக்களின் தாக்குதல்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.