வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

28.03.2021 08:27:03

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகைதந்த அனைவரும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.