முகக் கவசம் அணியாத நபர்களை கைது செய்ய விசேடசுற்றிவளைப்பு

14.08.2021 05:47:09

முகக் கவசம் அணியாதோர் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று காவல் துறையினரால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடி ஆணையின்றி கைது செய்யப்படுவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.