மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

20.07.2024 16:13:17

ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்