பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாடு – குவியும் பாராட்டு

05.08.2022 10:26:28

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற அரச சட்டத்தரணி காரியாலயத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சாஐன் 29651 கிட்னண் குலேந்திரன் பாராட்டப்பெற்றுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3-8-2022 பணப்பை ஒன்றை கண்டெடுத்தியிருந்தார்.

அதனை பரிசோதித்து பார்த்த போது 75520  ரூபா  பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டிருக்கின்றது. உடனே குறித்த உத்தியோகத்தர் இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபர் இடம் வழங்கியிருக்கின்றார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்த பால தலைமையில் குறித்த பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் உயர் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டியுள்ளனர்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கிட்னண் கோவிந்தராஜா அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .