இலங்கை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது !
03.05.2021 15:49:20
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்;டுகள் இழப்புக்கு 493 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
அத்துடன், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 227 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் 209 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த இரு அணிகளின் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது.
அதற்கமைய, 1 – 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.