உணவுப்பொருட்களை விநியோகிக்க நடமாடும் விற்பனை வாகனங்கள் !
30.05.2021 10:54:51
பொருளாதார மத்திய நிலையங்கள் 31ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை நாளை 31ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான சேவையினை முன்னெடுப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.