பிரான்ஸ் தூதரக அதிகாரியை சிறையில் அடைத்த நாடு!

06.06.2026 16:08:17

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவரை சிறையிலடைத்துள்ளது. மாலி நாடு, Yann V. என்னும் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு 6,225 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆண்டுகளுக்கு மாலிக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Yann V. பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைத்ததாகவும் கூறி அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது மாலி. பிரான்ஸ், Yann V. மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளதுடன், அவரை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.