5ம் திகதி முதல் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி!

08.01.2021 15:51:36

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, எதிர்வரும் 25ம் திகதி முதல் தனியார் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புக்களை நடத்த முடியும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, கல்வி அமைச்சர் இதனைக் கூறினார்.